Sunday, July 25, 2010

LOVE is in the air...
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலை பொழுதை முழு மதியும்
பிரிந்துபோவதில்லை
நேற்று வரை நேரம் போகவில்லை உனதருகே
நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும்
தோண்ரவில்லையே இது எதுவோ
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதையின்றி வின் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாழ் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவன் அன்பு என்னை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்.
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே

எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்று போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உறவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமை
இவன் போகும் வழி என் மனம் போகுதே
பாதை முடிந்தப்பிறகும் இந்த
உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லை
உலரும் காலை பொழுதை முழு மதியும்
பிரிந்துபோவதில்லை
நேற்று வரை நேரம் போகவில்லை உனதருகே
நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும்
தோன்றவில்லையே என்ன புதுமை
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே இது எதுவோ

No comments: